தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி; கேரள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு + "||" + Corona echo; Kerala Sreepadmanabhasami temple to be closed till 15th

கொரோனா எதிரொலி; கேரள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு

கொரோனா எதிரொலி; கேரள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு
கொரோனா எதிரொலியாக கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசாமி கோவில் அமைந்துள்ளது.  கொரோனா பாதிப்புகளால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் சிறிய மற்றும் பெரிய என அனைத்து கோவில்களும் மூடப்பட்டன.

இதன்பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.  இதன்படி, கோவில்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.  இதேபோன்று கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவிலும் திறக்கப்பட்டது.  எனினும், சமூக இடைவெளி, குறைந்த அளவிலான பக்தர்கள் என கட்டுக்கோப்புடன் சில விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், அந்த கோவிலில் உள்ள 2 பூசாரிகள் உள்பட கோவில் பணியாளர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகம் கோவிலை மூடுவது என முடிவு செய்துள்ளது.

எனவே, கேரளாவில் உள்ள ஸ்ரீபத்மநாபசாமி கோவில் வரும் 15ந்தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநில மின் நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் மந்திரி நிதின் ராவத் அறிவிப்பு
மராட்டிய மாநில மின் பகிர்மான நிறுவனத்தில் 8 ஆயிரத்து 500 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என மின்சார துறை மந்திரி நிதின் ராவத் தெரிவித்து உள்ளார்.
2. புதுவை மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரி மாநில மக்களுக்கு அரசு சார்பில் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
3. மராட்டியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
மராட்டியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடி நிவாரணத்தை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
4. இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள்; ஐ.சி.எம்.ஆர். அறிவிப்பு
இந்தியாவில் 10 கோடி கொரோனா பரிசோதனைகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளோம் என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
5. வெள்ள பாதிப்பு; மத்திய அரசிடம் கூடுதல் நிவாரண தொகை கேட்போம்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு
கர்நாடக வெள்ள பாதிப்பிற்காக மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிவாரண தொகையை கேட்போம் என முதல் மந்திரி எடியூரப்பா இன்றிரவு அறிவித்து உள்ளார்.