வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா, வெளியிலா என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது; மத்திய பிரதேச முதல் மந்திரி பேச்சு + "||" + Rahul Gandhi did not even know that onion yields underground or outside; MP CM Speech
வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா, வெளியிலா என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது; மத்திய பிரதேச முதல் மந்திரி பேச்சு
வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா அல்லது வெளியிலா என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, முன்னாள் முதல் மந்திரி கமல்நாத்தின் ஆட்சியில் மாநிலம் ஆனது ஊழல் மற்றும் இடைத்தரகர்களின் மையம் ஆக மாறி விட்டது.
கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டனர். முன்னாள் முதல் மந்திரியால், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.6 ஆயிரம் கோடி முழுமையாக சென்று சேரவில்லை. எனது முந்தைய அனைத்து திட்டங்களையும் அவர் நிறுத்தி விட்டார் என கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி டிராக்டரில் மெத்தையில் அமர்ந்து கொண்டு ஊர் சுற்றி வருகிறார். அவருக்கு விவசாயம் பற்றி ஒரு விசயமும் தெரியாது. வெங்காயம் விளைவது மண்ணுக்கு அடியிலா அல்லது வெளியிலா என்பது கூட ராகுல் காந்திக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.