தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு விசாரணை வரும் 13ந்தேதிக்கு தள்ளி வைப்பு + "||" + Kerala gold smuggling case; Swapna Suresh's bail hearing postponed to 13th

கேரள தங்க கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு விசாரணை வரும் 13ந்தேதிக்கு தள்ளி வைப்பு

கேரள தங்க கடத்தல் வழக்கு; ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு விசாரணை வரும் 13ந்தேதிக்கு தள்ளி வைப்பு
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனுவின் மீது நடைபெறும் விசாரணையை வரும் 13ந்தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கொச்சி,

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில் 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.  அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த கடத்தலுக்கு பின்னணியாக தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் செயல்பட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்தது.  பின்னர் அவர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டார்.  இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இதன் மீது நடைபெறும் விசாரணையை கேரள கொச்சி நீதிமன்றம் வரும் 13ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளது.