தேசிய செய்திகள்

மராட்டியத்தில் இன்று மேலும் 154 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + 154 police personnel tested positive for COVID19 in the last 24 hours & 2 died,Maharashtra Police

மராட்டியத்தில் இன்று மேலும் 154 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 154 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் மேலும் 154 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை, 

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மராட்டியத்தில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மராட்டியத்தில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 


இந்நிலையில், மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 154 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,735 ஆக உயர்ந்துள்ளது. 

இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 22,082 காவலர்கள் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 2,394 காவலர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைப்பு
மராட்டியத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் 4-வது முறையாக குறைக்கப்பட்டு இருப்பதாக மந்திரி ராஜேஷ் தோபே கூறினார்.
2. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
3. இந்தியா-அமெரிக்கா இடையே இன்று ‘2 + 2’ பேச்சுவார்த்தை
இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 + 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடக்கிறது.
4. மராட்டியத்தில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டிய மாநில துணை-முதல் மந்திரி அஜித்பாவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.