தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது- பாஜக விமர்சனம் + "||" + Temple priest set ablaze in Rajasthan: BJP says police’s punchline changed to 'Apradhi Mast, Janata Trast'

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது- பாஜக விமர்சனம்

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது- பாஜக விமர்சனம்
நில ஆக்கிரமிப்பை தடுக்க முயன்ற கோவில் பூசாரி, உயிரோடு தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம்  கரவுலி மாவட்டத்தில்  கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்களை தடுக்க முற்பட்ட பூசாரி பாபுலால் வைஷ்ணவ்,  தீ வைத்து கொளுத்தப்பட்டார். இதில் தீக்காயம் அடைந்த பாபுலால் வைஷ்ணவ் உயிரிழந்தார். 

எஸ்.பி. தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கபட்டு, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கான பணியை  ராஜஸ்தான் போலீஸ்  தொடங்கியுள்ளது.  குற்றம் சாட்டப்பட்ட இருவர்  கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, கரவுலி,  பகுதி காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

இந்த நிலையில்,  ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அசோக் கெஹ்லோட் அரசை தாக்கி, இந்த சம்பவத்தை கடுமையாக கண்டனம் செய்துள்ளார்.

"கரவுலி மாவட்டத்தின் சபோத்ராவில் பூசாரி ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைப் பார்க்கும்போது, ​​தலித், பெண்கள், வர்த்தகர்கள், குழந்தைகள், என யாரும் பாதுகாப்பாக இல்லை என்பது தெளிவாகிறது. மாநில அரசு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எழுந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும், "என்று அவர் கூறினார்.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா, ராஜஸ்தானி சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தை கண்டு அஞ்ச மறுக்கின்றனர்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
2. துணிவிருந்தால் எனது அரசை கவிழ்த்து பாருங்கள்- பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே சவால்
பீகாருக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்றால், பிற மாநில மக்கள் பணம் செலுத்த வேண்டுமா? எனவும் பாஜக தேர்தல் அறிக்கையை உத்தவ் தாக்கரே சாடினார்.
3. காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? நிர்மலா சீதாராமன் கேள்வி
எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக்கூடாது என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
4. இலவச தடுப்பூசி வாக்குறுதி: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்
பீகார் சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதில், அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது.
5. பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி யார்? அமித்ஷா பரபரப்பு பேட்டி
பீகாரில் பா.ஜ.க. கூடுதல் இடங்களை வென்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்பது குறித்த கேள்விக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார்.