தேசிய செய்திகள்

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி + "||" + Rahul Gandhi Taunts PM Over Wind Turbine Ideas, Ministers Hit Back

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக பதிலடி

பிரதமர் மோடியைக் கிண்டல் செய்த ராகுல் காந்தி- பாஜக  பதிலடி
காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியிருந்தார்.
புதுடெல்லி,

காற்றலை நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் அண்மையில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது டென்மார்க் நாட்டை சேர்ந்த காற்றலை நிறுவன சிஇஓ ஹெண்ட்ரிக் ஆண்டர்சன் என்பவரிடம்   பேசிய பிரதமர் மோடி, “காற்றாலை மூலம் மின்சாரம் மட்டுமின்றி, காற்றில் இருந்து சுத்தமான குடிநீர், சுத்தமான ஆக்ஸிஜனையும் பிரித்து எடுக்கும் சாத்தியங்கள் இருக்கிறதா” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். 

பிரதமர் மோடியின் வினவிய இந்த வீடியோ தொகுப்பை தனது டுவிட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, “ 'இந்தியாவுக்கான உண்மையான ஆபத்து என்னவென்றால், நம்முடைய பிரதமருக்குப் புரியாமல் இருப்பது அல்ல. அவரைச் சுற்றி இருப்பவர்கள் ஒருவருக்குக்கூட, அவரிடம் உண்மையைச் சொல்ல துணிச்சல் இல்லை என்பதே” என்றார். 

ராகுல் காந்தியின் கருத்தை கடுமையாக சாடியுள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், “ உலகின் முன்னணி நிறுவனங்களின் தலைவர்களே மோடியின் கருத்தை அங்கீகரிக்கும் போது,  ராகுல் காந்தி பிரதமர் மோடியை கேலி செய்கிறார்.  ராகுல் காந்திக்குப் புரிந்துகொள்ளும் சக்தியில்லை என்று அவரிடம் சொல்வதற்கு அவரைச் சுற்றியுள்ளவர்களுக்குத் துணிச்சல் இல்லை” என தெரிவித்துள்ளார்.  அதேபோல், மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியும் ராகுல் காந்தியை விமர்சித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி
மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வர உள்ளார்.
3. மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்
விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
4. "குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் ராகுல்காந்தி குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர்"குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம்" என கூறினார்.
5. மாநிலங்களவை தேர்தல்: குஜராத்தில் 2 இடங்களையும் பாஜக கைப்பற்றியது
குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் 2 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்