உலக செய்திகள்

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு + "||" + Pakistan bans TikTok after receiving complaints against 'immoral, indecent' content

டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தானிலும் தடை விதிப்பு

டிக் டாக் செயலிக்கு  பாகிஸ்தானிலும் தடை விதிப்பு
ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் டிக் டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது.
இஸ்லமபாத்,

உலகின் பல்வேறு பகுதிகளில் 'டிக் டாக்' பயன்படுத்தப்பட்டு வருகிறது. இளம் வயதினர் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள வீடியோ செயலியில், அநாகரிகமான பதிவுகளும் வெளியிடப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுவது உண்டு. அந்த வகையில்,  டிக் டாக் செயலியில் ஒழுக்க கேடான மற்றும் அநாகரிகமான விடீயோக்கள் வெளியாவதாக  கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்துள்ளது.  

சமூகத்தில் பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்த தொடர் புகார்களை அடுத்து  டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. சீனாவின் நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலியை தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

டிக் டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும், பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கும் பட்சத்தில் மீண்டும் டிக்டாக் செயலி சேவையை தொடர் அனுமதி கொடுக்கப்படும் எனவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பா? பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டால் பரபரப்பு
காங்கிரஸ்காரர்கள் எப்போதும் நாட்டின் முதுகில் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” என காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
2. டிக் டாக்கில் வீடியோ பதிவிட ஆசைப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி! தலையில் சுட்டு படுகொலை: பதிவான காட்சி
டிக் டாக்கில் பதிவிட வினோதமான வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 20 வயது பெண் தலையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. மருந்து மூலப்பொருட்களுக்கு சீனாவை மட்டுமே நம்பியிருப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை
மருந்து மூலப்பொருட்களுக்கு அண்டை நாடான சீனாவை மட்டுமே இந்தியா நம்பியிருப்பதா என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
4. அமெரிக்காவில் டிக் டாக், வி-சாட் செயலிகளை பதிவிறக்கம் செய்ய தடை
அமெரிக்காவில் டிக் டாக், வி சாட் ஆகிய செயலிகளை பதிவிறக்கம் செய்ய டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
5. லடாக் எல்லையில் பதற்றம் நீடிப்பு: சீனா, அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும்
லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், சீனா அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.