ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டாஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 போட்டி தொடரின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்-ப்ரித்வீஷா களமிறங்கினர்.
இந்நிலையில் ஜோஃப்ரா ஆர்சர் வீசிய 2வது ஓவரில் ஷிகர் தவான்(5 ரன்கள்) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து தற்போது ப்ரித்வீஷா, டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.