தேசிய செய்திகள்

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு + "||" + AAP to not contest Bihar polls, cites flood, Covid-19 situation

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பு

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம்: ஆம் ஆத்மி  கட்சி அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

பீகார் மாநிலத்தில் அக்டோபர்  28 தொடங்கி  நவம்பர் 7 வரை 3 கட்டமாக  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும்  தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி போட்டியிடுகிறது. 

மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற 122 இடங்கள் தேவைப்படுகிறது.  நிதீஷ் குமார்  தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை முக்கிய கட்சிகள் ஆகும்.  

இந்த நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவது இல்லை என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவாலுடன் ஒப்புதல் பெற்று இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பீகார் மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குமார் சிங் தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. "புதிய பீகார் ஒன்றைக் கட்டியெழுப்புங்கள்" - வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி வேண்டுகோள்
பீகார் மாநிலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி 'புதிய பீகார்' ஒன்றைக் கட்டியெழுப்புமாறு, வாக்காளர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
3. பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
4. திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது - மு.க.ஸ்டாலின்
திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணி விபி துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கூறி உள்ளார்