தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்படவில்லை; சீனா புது விளக்கம் + "||" + China disposes coronavirus blame, says pandemic broke out in various parts of the world before Wuhan reported

கொரோனா வைரஸ் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்படவில்லை; சீனா புது விளக்கம்

கொரோனா வைரஸ் உகான் நகரில் முதன் முதலில் வெளிப்படவில்லை; சீனா புது விளக்கம்
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது.
பெய்ஜிங்,

உலக நாடுகளை இன்று விழி பிதுங்க வைத்துக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டு 10 மாதங்கள் ஆகியுள்ள போதிலும் உலக நாடுகள் இதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. 

உலக வல்லரசு நாடான அமெரிக்காவே இந்த வைரஸ் பரவலால் நிலைகுலைந்து போனது. உலக அளவில் அதிகம் பாதித்த நாடாக உள்ள அமெரிக்கா, இதனால், சீனா மீது அவ்வப்போது இந்த விவகாரத்தில் விமர்சனங்களை  முன்வைத்து வருகிறது. குறிப்பாக டிரம்ப்  கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என பலமுறை வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார். 

இந்த நிலையில், கொரோனா வைரஸ்  தங்கள் நாட்டில் இருந்து
 இருந்து பரவவில்லை என சீனா புது விளக்கம் அளித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “  கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்பாகவே உலகின் பல்வேறு இடங்களில் இந்த வைரஸ் வெளிப்பட்டது. 

ஆனால் நாங்கள் மட்டுமே நோய்க்கிருமியை கண்டறிந்து , அதுகுறித்து வெளியே தெரிவித்து, முதலில் வைரசுக்கு எதிராக செயல்பட்டோம்.  அதன் மரபனு வரிசையை உலகத்துடன் பகிர்ந்து கொண்டோம். கொரோனா வைரஸ் தொற்று நோயாக அறிவிக்கப்படுவதற்கு முன் வுகானில் கண்டறியப்பட்டது என்பதை நாங்கள் மறுக்கிறோம். கொரோனா வைரஸ் புது வகையான வைரஸ் என்பதால், தினம் தினம் புது புது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. உலகை ஆதிக்கம் செலுத்த மூன்றாம் உலகப்போரை தூண்டும் சீனா..,ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் எச்சரிக்கை
மூன்றாம் உலகப்போரின் போர்க்களமாக ஐரோப்பாவை சீனா பார்ப்பதாக ஜெர்மன் உளவுத்துறை நிபுணர் ஒருவர் எச்சரித்து உள்ளார்.
2. பிரான்சில் கொரோனா பாதிப்பு உச்சம்- 52 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவ தொடங்கியுள்ளது.
3. இந்தியா - சீனா இடையேயான 8-வது கட்ட ராணுவ பேச்சுவார்த்தை இந்த வாரம் நடைபெற வாய்ப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனாவின் 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா பரவல் புதிய உச்சம்
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.