கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தானுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி + "||" + IPL Cricket 2020: Delhi set a target of 185 for Rajasthan

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தானுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: ராஜஸ்தானுக்கு 185 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 184 ரன்கள் எடுத்துள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 போட்டி தொடரின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது. டெல்லியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான்-ப்ரித்வீஷா களமிறங்கினர்.

ராஜஸ்தான் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் வீசிய 2வது ஓவரில் ஷிகர் தவான்(5 ரன்கள்) கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதனை தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்கள் எடுத்த போது ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரிஷ்ப் பண்ட் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தததால் டெல்லி அணியின் ரன் வேகம் சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ்(39 ரன்கள்) 4 சிக்ஸர்களை விளாசி டெல்லி ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மெயர்(1 பவுண்டரி, 5 சிக்ஸர்) 45 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இந்த நிலையில் டெல்லியில் ரன்வேகம் சற்று அதிகரித்தது. அடுத்ததாக களமிறங்கிய அக்ஸர் படேல்(17 ரன்கள்) தனது பங்கிற்கு 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசினார். ஆண்ட்ரூ டைர் வீசிய 20வது ஓவரில் ஆகஸ்ர் பட்டேல் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

அஷ்வின் மற்றும் ரபடா ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாட இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்
தொற்று பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களும் தற்காலிகமாக சில இடங்களில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
2. ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் தொடர் போராட்டம்
ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
3. ஐபிஎல்; ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 191- ரன்கள் குவிப்பு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்ணையித்துள்ளது.
4. வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசு 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது.
5. ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத் அணி
ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.