உலக செய்திகள்

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் சீனா சேர்ந்தது + "||" + In reversal, China joins global Covax initiative to distribute coronavirus vaccines

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் சீனா சேர்ந்தது

சர்வதேச தடுப்பூசி திட்டத்தில் சீனா சேர்ந்தது
கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்கும் திட்டம் ‘கோவேக்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
பீஜிங்,

கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து நிறுத்துவதற்காக சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரித்து, வினியோகிக்கும் திட்டம் ‘கோவேக்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உலக சுகாதார நிறுவனமும், ‘காவி’ தடுப்பூசி கூட்டணியும் சேர்ந்து நிர்வகிக்கின்றன. இந்த திட்டத்தில் கொரோனா தடுப்பூசியின் பொதுவான தேடலில் பல்வேறு நாடுகளும் ஒன்றிணைந்துள்ளன.


இந்த சர்வதேச தடுப்பூசி திட்டத்தில், சீனாவும் முறைப்படி சேர்ந்து விட்டது. இதையொட்டி சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹூவா சுனிங் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், “அக்டோபர் 8-ந்தேதி (நேற்று முன்தினம்) சீனாவும், காவி தடுப்பூசி கூட்டணியும் கோவேக்ஸ்-ஐ அணுகுவதற்கு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இது ஒரு முக்கியமான படி ஆகும். இதை கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஒட்டுமொத்தமாக பொதுநலனாக மாற்றுவதற்கான வாக்குறுதியின் ஒருபகுதியாக சீனா மேற்கொண்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.