தேசிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்றுக்குழு 36-வது கூட்டம் + "||" + 36th Meeting of the Cauvery Disciplinary Committee

காவிரி ஒழுங்காற்றுக்குழு 36-வது கூட்டம்

காவிரி ஒழுங்காற்றுக்குழு  36-வது கூட்டம்
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.
புதுடெல்லி,

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 36-வது கூட்டம் ஒழுங்காற்றுக்குழு தலைவர் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


தமிழகம் சார்பில் திருச்சி நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியன், துணைத்தலைவர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மதியம் சுமார் ஒரு மணிக்கு தொடங்கி, மாலை 5.15 மணிக்கு முடிவடைந்த இந்த கூட்டத்தில் 4 மாநில பிரதிநிதிகளும் தங்களது மாநிலத்தில் பெய்த மழை அளவு, அணைகளுக்கு வந்த நீரின் அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, வினியோகிக்கப்பட்ட நீரின் அளவு போன்ற புள்ளி விவரங்களை குழு தலைவரிடம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து 2019-2020 நீரியல் ஆண்டுக்கான நீர்வரத்து தணிக்கை நடைபெற்றது.

மேலும் முக்கிய இடங்களுக்கு தேவையான தொலைத்தொடர்பு கட்டமைப்பு பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முன்னதாக, மேகதாது அணை விவகாரம் பற்றி கர்நாடக அதிகாரிகள் பேச முற்பட்டதற்கு, தமிழக அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.