தேசிய செய்திகள்

மத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு + "||" + The number of coalition ministers in the BJP government has dropped to one

மத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு

மத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு
மத்திய பா.ஜனதா அரசில் கூட்டணி கட்சி மந்திரிகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்தது விரைவில் மந்திரிசபை விஸ்தரிப்பு
புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு 2-வது முறையாக பதவியேற்றபோது அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (அரவிந்த் சாவந்த்), சிரோமணி அகாலிதளம் (ஹர்சிம்ரத் கவுர் பாதல்), லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்), இந்திய குடியரசு கட்சி (ராம்தாஸ் அதவாலே) ஆகிய கட்சிகளுக்கும் மந்திரி சபையில் இடம் அளிக்கப்பட்டது. ஐக்கிய ஜனதாதளம் கட்சி மந்திரிசபையில் சேரவில்லை. அதேநேரம் அரசில் அங்கம் வகித்து வந்த சிவசேனா, கடந்த ஆண்டு இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக, வேளாண் சட்டங்களை முன்னிறுத்தி சிரோமணி அகாலிதளமும் சமீபத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதனால் அந்தந்த கட்சிகளின் மந்திரிகளும் பதவி விலகினர். மேலும் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இதன் மூலம் கூட்டணி கட்சிகளின் பிரதிநிதித்துவ காலியிடம் அதிகரித்து உள்ளது. தற்போது கூட்டணி சார்பில் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் ஒரே மந்திரியாக ராம்தாஸ் அதவாலே மாறியிருக்கிறார்.


இதன்காரணமாக மத்திய மந்திரி சபையை விரைவில் விஸ்தரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை