உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது ஜோ பைடன் காட்டம் + "||" + Why Joe Biden, Kamala Harris are dodging ‘court-packing’ question

கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது ஜோ பைடன் காட்டம்

கமலா ஹாரிஸ் பற்றிய டிரம்பின் கருத்து வெறுக்கத்தக்கது ஜோ பைடன் காட்டம்
தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான மைக் பென்சுக்கும் இடையிலான நேரடி விவாதம் உட்டா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
நியூயார்க்,

அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதிக்கு போட்டியிடும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசுக்கும் குடியரசு கட்சி வேட்பாளரான மைக் பென்சுக்கும் இடையிலான நேரடி விவாதம் உட்டா மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விவாதம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், கமலா ஹாரிசை கடுமையாக விமர்சித்தார்.


“ஒரு வேளை நவம்பர் 3-ந்தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைன் வெற்றி பெற்றால், ஒரு மாத காலத்துக்குள் ஹாரிஸ் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார். அவர் ஒரு கம்யூனிசவாதி. அவர் ஒரு சமூக ஆர்வலர் அல்ல. சமூக ஆர்வலரில் இருந்து வேறுபட்டவர். அவரது கருத்துகளைப் பாருங்கள். நாட்டின் எல்லையில் இருக்கும் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பலாத்கார குற்றவாளிகளுக்காக எல்லைகளைத் திறந்து விட்டு, நாடு முழுவதும் குற்றவாளிகளைப் பரப்ப வேண்டும் என்கிறார்” என்று டிரம்ப் கூறினார்.

இந்த நிலையில் டிரம்பின் இந்த கருத்துக்கு ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில் “அமெரிக்க மக்கள் எல்லோரும் நோயாளிகளாக, தளர்ந்துபோய்விட்டனர். கமலா ஹாரிஸ் பற்றிய ஜனாதிபதியின் கருத்து வெறுக்கத்தக்கது, ஜனாதிபதி அலுவலகத்தின் தரத்தை தாழ்த்தக்கூடியது. ஜனாதிபதி யார் என்று மக்கள் அறிந்துகொண்டுவிட்டனர். இது நிறுத்தப்பட வேண்டும்” எனக் கூறினார். மிக பலமான கமலா ஹாரிசை எதிர்கொள்வது என்பது டிரம்புக்கு மிகப்பெரிய சிக்கலாக உள்ளது என கூறிய ஜோ பைடன் “நீங்கள் மிகச் சிறப்பான பணியை செய்துள்ளீர்கள்” என்று கமலா ஹாரிசை புகழ்ந்தார்.