தேசிய செய்திகள்

மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு + "||" + Earthquake in Mizoram; Record 3.6 on the Richter scale

மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு

மிசோரமில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.6 ஆக பதிவு
மிசோரமில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
சாம்பை,

மிசோரமில் சாம்பை பகுதியில் இன்று காலை 6.09 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனினும், இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட பிற விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது.  இதன்படி, இமாசல பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை 2.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.3 ஆக பதிவானது.  இதேபோன்று, மணிப்பூரின் காம்ஜோங் பகுதியில் நேற்று அதிகாலை 3.12 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.4 ஆக பதிவானது.

இதன்பின்பு அருணாசல பிரதேசத்தின் தவாங் நகரில் நேற்று காலை 8.21 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 3.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை வடகிழக்கே அமைந்த மிசோரமில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் பதிவு
நாட்டில் 87 சதவீத கொரோனா பாதிப்புகள் 6 மாநிலங்களில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. அமெரிக்கா - அலாஸ்காவில் நிலநடுக்கம்
அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
3. மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.3 ஆக பதிவு
மியான்மரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. லடாக்கில் கடந்த 2 நாட்களில் 2வது முறையாக நிலநடுக்கம்
லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
5. மியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்
மியான்மரில் ராணுவத்தால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங்சான் சூகி மீதான புதிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.