தேசிய செய்திகள்

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை + "||" + Encounter in Kashmir; 2 terrorists shot dead

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிங்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு படையினருக்கு உளவு தகவல் கிடைத்தது.  இதனை தொடர்ந்து, படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  இதில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  வீரர்கள் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது.  இதனை தொடர்ந்து நடந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க. பெண் நிர்வாகி போதைக்கு அடிமை; தந்தை கூறிய தகவலை வெளியிட்ட போலீசார்
மேற்கு வங்காள பா.ஜ.க. இளைஞரணி தலைவி போதை பொருள் அடிமை என அவரது தந்தை கூறிய தகவல் அடிப்படையில் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
2. டெல்லி பேரணியில் போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு: வைகோ, கி. வீரமணி கண்டனம்
டெல்லி பேரணியில் போலீசாரின் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சுக்கு வைகோ மற்றும் கி. வீரமணி கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
3. காஷ்மீரில் 12 மணிநேரத்திற்கும் மேல் நீடித்த சண்டை: 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் 12 மணிநேரத்திற்கும் மேல் நீடித்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
4. காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு: பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
5. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை