தேசிய செய்திகள்

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல் + "||" + Road accident in Uttar Pradesh: 3 killed; CM condolences

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து:  3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்
உத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
அலிகார்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதன் ஒரு பகுதியாக பேருந்து சேவைகளும் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.  அந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்துள்ளனர்.  பேருந்து அலிகார் மாவட்டம் தப்பல் என்ற இடத்தில் சென்றபொழுது திடீரென விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.  5 பேர் காயமடைந்தனர்.  இதுபற்றி அறிந்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.  விபத்தில் காயமடைந்தோருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவது பற்றி உறுதி செய்யும்படி மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயம்; மத்திய மந்திரி கண்டனம்
மேற்கு வங்காள தொழிலாளர் துறை மந்திரி மீது வெடிகுண்டுகளை வீசி நடந்த தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்து உள்ளார்.
2. அமைதி காப்பாளர்கள் மீது தாக்குதல்: ஐ.நா. பொது செயலாளர் கண்டனம்
ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் மாலி நாட்டில் அமைதி காப்பாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
3. ஆந்திர பிரதேசத்தில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சுற்றுலா பேருந்து; 4 பேர் உயிரிழப்பு
ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
4. மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்ற ரிக்சா ஓட்டுனரின் மகள்
ரிக்சா ஓட்டுனரின் மகளான மான்யா சிங் என்பவர் மிஸ் இந்தியா 2020ன் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ளார்.
5. மராட்டிய தீ விபத்து: மின்கசிவே 10 குழந்தைகள் உயிரிழக்க காரணம்; சுகாதார மந்திரி தகவல்
மராட்டிய அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழக்க மின்கசிவே காரணம் என சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.