தேசிய செய்திகள்

பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; தாய்-மகனை கால்வாயில் வீசிச் சென்ற கும்பல் + "||" + Woman Sexual Abused In Bihar; Mother-son thrown into canal

பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; தாய்-மகனை கால்வாயில் வீசிச் சென்ற கும்பல்

பீகாரில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; தாய்-மகனை கால்வாயில் வீசிச் சென்ற கும்பல்
பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேர் கொண்ட கும்பல் அவரையும் அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளது.
பாட்னா,

பீகார் மாநிலம் பக்சரில் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை 7 பேர் கொண்ட கும்பல்  பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதன் பின்னர் அவரையும், அவருடைய மகனையும் தாக்கி கால்வாயில் வீசிச் சென்றுள்ளனர். இதில் 5 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.


தீவிர காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் தற்போது பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரசில் இளம் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், தற்போது பீகாரில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் பீகாரில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டசபை தேர்தல் இன்று தொடங்கியது. முதல்கட்டமாக 71 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
2. பீகார் சட்ட சபை தேர்தல்- முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதல் கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது
3. பீகார் முதல் கட்ட தேர்தல்- இன்றுடன் பிரசாரம் ஓய்கிறது
முதல் கட்டமாக 71 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
4. “பீகாரில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை” - ராஷ்ட்ரீய ஜனதா தளம் தேர்தல் அறிக்கை வெளியீடு
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
5. பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள் 375 பேர்
வறுமை கோட்டிற்கு கீழ் 33.74 சதவீதம் பேர் வாழும் பீகாரில் கோடீஸ்வர வேட்பாளர்கள் 375 பேர் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.