உலக செய்திகள்

இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா; போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கு அறிவிப்பு + "||" + DIVIDED KINGDOM 3-tier lockdown system: Boris Johnson faces attacks from all sides after splitting UK into coronavirus risk levels

இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா; போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கு அறிவிப்பு

இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா; போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கு அறிவிப்பு
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ளதைத் தொடர்ந்து, பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
லண்டன்

இங்கிலாந்தில் வேகம் எடுக்கும் கொரோனா பாதிப்பால் நாட்டை 3 அடுக்குகளாக பிரித்து பிரதமர்  போரிஸ் ஜான்சன் 3-அடுக்கு ஊரடங்கை அறிவித்து உள்ளார். இதனால் அனைத்து தரப்பிலிருந்தும் அவருக்கு எதிர்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் வடக்கில் தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக பரவி வருவதாகக் காட்டுகின்றன, ஆனால் நோய்த்தொற்றுகள் வட மேற்கு மற்றும் வடகிழக்கில் வயதானவர்களுக்கு பரவுகின்றன.

இவ்வாறாக வந்த எச்சரிக்கைகளைத் தொடர்ந்து ஜான்சன் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடுத்தரம், அதிக அளவு, மிக அதிக அளவு என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவருவதில் எவ்வித மகிழ்ச்சியும் இல்லையென்றும், ஆனால் அரசாங்கம் உயிர்களை காப்பாற்ற தீவிரமாக இயங்க வேண்டியுள்ளது என கூறி உள்ளார்.

மேலும் புதிய கட்டுப்பாடுகள் விவரம் வருமாறு:-

ஏற்கெனவே இருந்த ஆறு நபர்கள் மேல் கூடக்கூடாது என்கிற விதியும், கட்டாய முககவம் என்கிற விதையையும் மக்கள் மேலும் அதீத கவனத்துடன் பின்பற்ற ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி நடுத்தர அளவில் தொற்று பாதிப்புகளை கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.

மதுபான விடுதிகளும், உணவகங்களும் கட்டாயமாக இரவு 10 மணிக்கு பின்னர் தொடரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு நிலையங்களை பொறுத்த அளவில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்கலைக்கழகங்களை பொறுத்தமட்டில் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை எவ்வித தளர்வுகளுமின்றி கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

பயணத்திற்கும், போக்குவரத்திற்கும் பாரிய அளவிலான கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. வேலைகளை பொறுத்த அளவில், உங்களால் முடிந்தால் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்பதே ஆலோசனை என ஜான்சன் கூறியுள்ளார்.

அதேபோல் திருமண நிகழ்ச்சிகளில் 15 பேரும், இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் 15 நபர்களும், இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் அதிகபட்சமாக 30 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற கடைகள்
உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 

விளையாட்டுகளை பொறுத்த அளவில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஆறு விதிமுறைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட உட்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் முழு இங்கிலாந்துக்கும் ஆறு மாதக் காலத்திற்கு பொருந்தும். 28 நாட்களுக்கு ஒரு முறை விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படும். 

அதிக அளவு தொற்று பாதிப்புகளை கொண்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கீழ்க்கண்ட விதிமுறைகள் அமல்படுத்தப்படும்.இந்த பகுதியில் வீட்டிற்குள் விருந்தினர்களை தங்க வைக்கவோ, அல்லது நண்பர்களின் வீட்டிற்கு செல்லவோ தடை செய்யப்பட்டுள்ளது. 

அத்தியாவசியமற்ற கடைகள் உட்பட அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.அதேபோல உடற்பயிற்சி கூடங்கள், சிகை அலங்கார நிலையங்களை பொறுத்த அளவில், தொடர்ந்து இயங்க வேண்டுமா அல்லது, மூடப்பட வேண்டுமா என்பது குறித்து உள்ளூர் நிர்வாகங்கள் முடிவுகளை மேற்கொள்ள வழிகாட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுகளை பொறுத்த அளவில் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள ஆறு விதிமுறைகளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட உட்புற விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரொனா தொற்று : தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
கொரொனா தொற்று அதிகரிப்பால் தேவைப்பட்டால் இரவு நேரங்களில் ஊரடங்கை அமல்படுத்திக் கொள்ளலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
2. தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று; சென்னையில் 467 பேர் பாதிப்பு
தமிழகத்தில் இன்று 1,534 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சென்னையில் 467 பேர் பாதிப்பு: 1,873 பேர் குணமடைந்துள்ளனர்.
3. தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுக்கு வேண்டுகோள்
கொரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிக்கான மாவட்ட அளவிலான பணிக்குழுவை உருவாக்குங்கள் என பிரதமர் மோடி மாநில முதல்வர்களிடம் கூறி உள்ளார்.
4. ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை
ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்து உள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி திட்டம் டிசம்பர் 11 அல்லது 12 முதல் தொடங்கும் என தடுப்பூசி திட்டத்தின் தலைவர் கூறி உள்ளார்.