மாநில செய்திகள்

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல் + "||" + Death penalty for sexual assault: Vijayakanth insists

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்

பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை: விஜயகாந்த் வலியுறுத்தல்
பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நெடுங்காலமாகவே தலித் பெண்கள் அடக்குமுறைகள், பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். தலித் சமூகத்தினருக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்க 1989-ல் சட்டம் உருவாக்கப்பட்டாலும், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறையவில்லை. ஆணாதிக்க சமூகத்தில் பேதமின்றி அனைத்து பெண்களுக்கும் எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுவரும் இந்த சூழ்நிலையில், தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க வேண்டும் என்றால் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.

அவ்வாறு மரண தண்டனை வழங்கும் பட்சத்தில் வரும் காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மரண தண்டனை ஒன்றே தீர்வு. அதை உடனடியாக நீதிபதிகள் நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மாணவியை ஆசை வார்த்தை கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 44 ஆண்டுகள் சிறை
குன்னூர் அருகே திருமணம் செய்வதாகக் கூறி 17 வயது மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு மகளிர் நீதிமன்றத்தில் உச்சபட்ச தண்டனையாக 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2. கோவையில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் சிறைத்தண்டனை
மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் பள்ளி ஓட்டுநர், உதவியாளருக்கு சாகும்வரை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.