தேசிய செய்திகள்

தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல்: மத்திய அரசு அனுமதி + "||" + Purchase of one lakh tonnes of copra from Tamil Nadu, Kerala and Andhra Pradesh: Permission from Central Government

தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல்: மத்திய அரசு அனுமதி
தமிழகம், கேரளா, ஆந்திராவில் இருந்து ஒரு லட்சம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து 2020-2021-ம் ஆண்டுக்கான ‘காரீப்’ பருவ விவசாய விளைபொருட்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் தொடர்ந்து கொள்முதல் செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கொள்முதல் பணிகள் சுமுகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் 24-ந் தேதியில் இருந்து அக்டோபர் 11-ந் தேதி வரை 3 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 4 மில்லியன் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பதாக வேளாண்துறையின் பண்ணை அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த ஆண்டைவிட 33 சதவீதம் அதிகம். இதுதவிர, அக்டோபர் 11-ந் தேதி வரை 2 வித பருப்பு வகைகள் 606.56 டன் அளவுக்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலை மதிப்பு ரூ.4.36 கோடி ஆகும்.

மேலும் தமிழகம், கர்நாடகம், குஜராத் உள்பட 10 மாநிலங்கள் 3.70 மில்லியன் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களை வாங்க விடுத்த கோரிக்கைக்கும், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 1 லட்சம் டன் கொப்பரை கொள்முதலுக்கு விடுத்த கோரிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் 90 நீர் நிலைகளில் 155 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு - பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
தமிழகத்தில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர் நிலைகளில் 155 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. வருகிற கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
2. தமிழகத்தில் நவம்பர் மாதம் ரூ.7 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வசூல்
தமிழகத்தில் நவம்பர் மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.7 ஆயிரத்து 84 கோடி வசூலாகி உள்ளது.
3. தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடக்கம்: அனைத்து கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் 11-வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்து கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளை 7-ந் தேதி முதல் நடத்த அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
4. தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் வழக்கத்தைவிட வடகிழக்கு பருவமழை 15% குறைவாக பெய்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
5. தமிழகத்தில் இன்று புதிதாக 1,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.