மாநில செய்திகள்

தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - கி.வீரமணி அறிக்கை + "||" + There is no confusion in the DMK alliance - K. Veeramani report

தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - கி.வீரமணி அறிக்கை

தி.மு.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை - கி.வீரமணி அறிக்கை
இரும்பு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. தலைமையில் அமைந்த கூட்டணி பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி போன்று கொள்கையற்ற கூட்டணி அல்ல. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளுக்கு கொள்கை குழப்பம் எதுவும் கிடையாது. இந்த கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை தாங்கும் கட்சி. தி.மு.க. தலைவர் தான் முதல்-அமைச்சர் வேட்பாளர்.


வீண் கற்பனைகள் மூலம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை கலைக்கலாம் அல்லது கலகலக்க வைக்கலாம் என்று யாரும் அற்பக்கனவு காண வேண்டாம். இரும்பு கோட்டை போல் அமைந்துள்ள இந்த மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை.

தி.மு.க. கூட்டணியை அந்த சக்திகளால் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. 2019 நாடாளுமன்ற தேர்தலை போன்று வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றியை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்'; மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றி வந்திருக்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று உதயநிதியை ஆதரித்து வாக்கு கேட்டபோது மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
2. மக்கள் தீர்ப்பு அ.தி.மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் ‘தினத்தந்தி’க்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டி
மக்கள் தீர்ப்பு அ.தி. மு.க.வுக்கு மகத்தான வெற்றியை தரும் என்றும், தி.மு.க. கூட்டணிதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக, விசிக உடன் நாளை பேச்சுவார்த்தை
தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மதிமுக மற்றும் விசிக ஆகிய 2 கட்சிகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
4. தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் பேட்டி
தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிரு‌‌ஷ்ணன் கூறினார்.
5. 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் ; மு.க.ஸ்டாலின்
234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.