மாநில செய்திகள்

சென்னை சென்டிரல்-மதுரை, கோவை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Chennai Central-Madurai, Coimbatore festive special train - Southern Railway announcement

சென்னை சென்டிரல்-மதுரை, கோவை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை சென்டிரல்-மதுரை, கோவை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கூட்ட நெரிசலை தவிர்க்க பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் - கோவை, மதுரை இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


* சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-மதுரை (வண்டி எண்: 06019) இடையே திங்கட்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 19-ந்தேதி முதல், இரவு 10.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

மறுமார்க்கமாக மதுரை-சென்னை சென்டிரல் (06020) இடையே செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் ஏ.சி. அதிவிரைவு சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி முதல் மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள காலை 7.50 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

* சென்னை சென்டிரல்-கோவை (06027) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 7.10 மணிக்கு சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக கோவை-சென்னை சென்டிரல்(06028) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து வருகிற 19-ந்தேதி முதல் இயக்கப்படும்.

* கன்னியாகுமரி-ஹவுரா (02666) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 24-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக ஹவுரா-கன்னியாகுமரி (02665) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் திங்கட்கிழமை தோறும் மாலை 4.10 மணிக்கு ஹவுரா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

* சந்திரகாச்சி-சென்னை சென்டிரல் (02807) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.05 மணிக்கு சந்திரகாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி முதல் இயக்கப்படும். மறுமார்க்கமாக சென்னை சென்டிரல்- சந்திரகாச்சி (02080) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 18-ந்தேதி முதல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா? விசாரணை நடப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
கோவையில் 3 மாத குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசி காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
2. மதுரை: புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
மதுரையில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது
3. கோவை வடவள்ளியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து; ரூ.6 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
கோவை வடவள்ளியில் பர்னிச்சர் குடோனில் தீப்பிடித்ததில் ரூ.6 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.
4. மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறக்க வேண்டும்; கோவைக்கு வந்த நாடாளுமன்ற குழுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை
மூடப்பட்ட என்.டி.சி. மில்களை திறந்து இயக்க வேண்டும் என்று கோவை வந்த நாடாளுமன்ற தொழிலாளர் நிலைக்குழுவிடம் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
5. கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.2½ கோடியில் தார்சாலை அமைக்கும் பணிகள்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்
கோவை தெற்கு மண்டல பகுதியில் ரூ.2½ கோடியில் தார் சாலை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை