மாநில செய்திகள்

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த் + "||" + Actor Rajinikanth paid Rs 6.5 lakh to the corporation

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்

ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்
ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார்.
சென்னை,

ராகவேந்திர சொத்து வரி நோட்டீஸை ரத்து செய்யக் கோரி ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற வேண்டும் என, கூறி, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இது குறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  அனுபவமே பாடம் என்றும் டிவிட்டரில் அவர் கருத்து கூறினார்.

இந்நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை  மாநகராட்சிக்கு நடிகர் ரஜினிகாந்த் செலுத்தினார். நீதிமன்றத்தில் சொத்து வரி தொடர்பாக வழக்கு தொடர்ந்து வாபஸ் பெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வரி செலுத்தி உள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்த இன்றுடன் கெடு நிறைவடையும் நிலையில் ராகவேந்திரா மண்டபத்திற்கான சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை மாநகராட்சிக்கு ரஜினிகாந்த் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.