தேசிய செய்திகள்

விதி மீறலில் ஈடுபட்டவரை தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்; காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளிய டிரைவர்! + "||" + An FIR has been registered against the driver of the car, Shubham, at Delhi Cantt police station, South West Delhi.

விதி மீறலில் ஈடுபட்டவரை தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்; காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளிய டிரைவர்!

விதி மீறலில் ஈடுபட்டவரை தடுக்க முயன்ற போக்குவரத்து காவலர்; காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளிய டிரைவர்!
டெல்லியின் தில்லா குவானில், விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, போக்குவரத்து காவலர் தடுக்க முயன்றபோது அவரை காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,

ஏ.என்.ஐ-யில் வெளியிடப்பட்ட வீடியோவில் டெல்லியின் தில்லா குவானில், விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, அங்கிருந்த போக்குவரத்து காவலர் தடுக்கிறார். அவர் ஏதோ கேட்பதற்கு முன் வாகனத்தை எடுக்கும் டிரைவரை, தடுக்க காரின் முன்பகுதியில் நின்றுள்ளார்.

ஆனால், அவர் வாகனத்தை தொடர்ந்து இயக்கியதால் பேனட்டில் பிடித்துக் கொள்கிறார் காவலர். அவரை அப்படியே சில மீட்டர்கள் இழுத்துச் செல்கிறார் டிரைவர்.

அத்துடன், கார் தாறுமாறாக சாலையில் செல்கிறது. சில மீட்டர்களில் அந்த காலவர் கீழே விழுகிறார். அருகில் வந்த வாகனங்கள் உடனே நிறுத்தப்பட்டதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனால், காய விவரங்கள் பற்றி வெளியாகவில்லை.

இந்த வீடியோ அதிகம்பேரால் பகிரப்பட்டுள்ளது. அத்துடன், விதி மீறலில் ஈடுபட்டதுடன் காரில் காவலரை இழுத்துச் சென்ற நபர் மீது டெல்லி கேன்ட் காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 12-ம் தேதி நடந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.