சினிமா செய்திகள்

முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு + "||" + Opposition to actor Vijay Sethupathi starring in Muthiah Muralitharan biopic

முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு

முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு
முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 800 படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும்எ ன்பாரதிராஜாவும், எட்டப்பன் ஆக வேண்டாம் என கவிஞர் தாமரையும் கூறி உள்ளனர்.
சென்னை

இலங்கையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள 800 படம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ள நிலையிலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

முரளிதரனின் குழந்தைப் பருவத்தில் துவங்கி, அவரது பந்து வீசும் முறை சர்ச்சையானது, அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை பேசுகிறது இத்திரைப்படம்.
'800' படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கைத் தவிர்க்கவும் என்று விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்திருப்பதால், முத்தையா முரளிதரன் பயோபிக் கதைக்கு '800' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கைத் தமிழர்கள் சார்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. தொடர்ச்சியாக சமூக வலைதளத்திலும் இந்த எதிர்ப்பு எதிரொலித்து வருகிறது.

இயக்குநர் சீனு ராமசாமி, சேரன் உள்ளிட்ட பலரும் '800' படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தற்போது, இயக்குநர் பாரதிராஜாவும் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில் 

தாங்கள் செய்யவிருக்கும் '800' என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன். நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர்.
விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்?. எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரை முத்தையா முரளிதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். அடிபட்ட வலியை நினைவுகூரும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... எனக் கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன். இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலங்காலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா?
எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதைத் தவிர்க்க முடியுமா பாருங்கள். 
என கூறி உள்ளார்.

விஜய் சேதுபதியின் பெயர் எட்டப்பனின் பெயருக்கு இணையானதாக மாறிவிடக்கூடாது. அந்தப் படத்தில் நடிப்பதைத் தவிருங்கள் என கவிஞர் தாமரையும் கூறியிருக்கிறார்.

"முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டுவந்தது.

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார்.

வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே! எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது. மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்" என்று அவர் கூறியிருக்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. வலுக்கும் எதிர்ப்புகள்- முரளிதரன் படத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகுவாரா?
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன
2. முத்தையா முரளிதரன் வாழ்க்கை திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது-அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி
முத்தையா முரளிதரன் வாழக்கை திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்காமல் இருப்பது அவரது புகழுக்கு நல்லது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
3. இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா...? முத்தையா முரளிதரன் வேதனை
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவன் போல் என்னை சித்தரிக்க முயலுகிறார்கள். 800 திரைபடத்தை பல்வேறு காரணங்களுக்காக அரசியல் ஆக்குகிறார்கள் என முத்தையா முரளிதரன் கூறி உள்ளார்.
4. புதிய தோற்றத்தில் விஜய்சேதுபதி
நடிகர் விஜய்சேதுபதி புதிய தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி உள்ளது.