தேசிய செய்திகள்

மத்திய பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் + "||" + 7 mysterious deaths in last 12 hours in Madhya Pradesh

மத்திய பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம்

மத்திய பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம்
மத்திய பிரதேசத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் அடைந்த விவகாரத்தில் முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
உஜ்ஜைன்,

மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.  கொரோனா பாதிப்புகளால் மாநிலம் ஒருபுறம் இன்னல்களை சந்தித்து வருகிறது.  இதேபோன்று பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றாலும் அவ்வப்பொழுது மாநிலத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி விடுகிறது.

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணிநேரத்தில் 7 பேர் மர்ம மரணம் அடைந்துள்ளனர்.  அவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.  இதனை அறிந்த முதல் மந்திரி சவுகான் 7 பேர் மரணம் அடைந்தது பற்றி விசாரணை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டு உள்ளார்.