தேசிய செய்திகள்

வடகர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம் + "||" + ‘Red Alert’ for 4 districts in North Karnataka - Meteorological Center

வடகர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்

வடகர்நாடகத்தில் 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ - வானிலை ஆய்வு மையம்
வடகர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
பெங்களூரு,

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன்காரணமாக தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. 

இதனால் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் எல்லையில் அமைந்து உள்ள பீதர், கலபுரகி, ராய்ச்சூர், பாகல்கோட்டை, பல்லாரி, விஜயாப்புரா, யாதகிரி உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வடகர்நாடகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் பீதர், கலபுரகி, ராய்ச்சூர், யாதகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்து வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டு உள்ளது.  தொடர்ந்து பெய்து வரும் கனமழை, அதனால் ஏற்பட்டு உள்ள வெள்ளப்பெருக்கால் அப்பகுதி மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.