தேசிய செய்திகள்

டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்; மாணவர் கைது + "||" + Impersonation in Delhi Jamia University entrance exam; Student arrested

டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்; மாணவர் கைது

டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம்; மாணவர் கைது
டெல்லி ஜமியா பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தேர்வெழுத வேண்டிய மாணவருக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி,

டெல்லியில் புகழ் பெற்ற ஜமியா பல்கலைக்கழகத்தில் நடந்த நுழைவு தேர்வொன்றில் டீன் ஏஜ் மாணவர் ஒருவர் தேர்வெழுதியுள்ளார்.  சந்தேகத்திற்குரிய வகையில் அவரை பிடித்து விசாரித்ததில் அந்த மாணவர் ஆள்மாறாட்டம் செய்தது தெரிய வந்துள்ளது.

இந்த மாணவரும், தேர்வு எழுத வேண்டிய மாணவரும் பயிற்சி மையம் ஒன்றில் சேர்ந்து ஒன்றாக பயின்று வந்துள்ளனர்.  அந்த மையத்தின் உரிமையாளர் பிடிபட்ட மாணவரிடம் ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதும்படி கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலாக, மாணவரின் பயிற்சி கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என உரிமையாளர் உறுதி கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய பயிற்சி மைய உரிமையாளர் மற்றும் தேர்வெழுத வேண்டிய மாணவர் ஆகிய இருவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.  தப்பியோடிய அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. குளித்தலை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 25 பேர் கைது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2. போடியில் பூ வியாபாரி குத்திக்கொலை; வாலிபர் கைது
போடியில் பூ வியாபாரியை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. வாழப்பாடி அருகே ஆண் பிணம்: குடிபோதையில் வாலிபர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை சிறுவன் உள்பட 2 பேர் கைது
வாழப்பாடி அருகே குடிபோதையில் வாலிபரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. திருச்சியில் உள்ள வங்கியில் காசாளரிடம் ரூ.74 ஆயிரம் திருடிய பெண் கைது
திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் காசாளரிடம் ரூ.74 ஆயிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
5. மீனவரை கொன்ற வழக்கில் 2 பேர் கோவையில் சரண்; அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்
மீனவர் கொலை வழக்கில் 2 பேர் கோவையில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைது செய்யப்பட்டார்.