தேசிய செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம் + "||" + For OBC students in medical school 50% reservation Can't deliver this year Scheduled in the Federal Supreme Court

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மேலும் காலம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறி உள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைத் தொடர்ந்து மனுதாரர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர். 

மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
2. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் மத்தியஅரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
3. மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு: ‘அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது’ - மு.க.ஸ்டாலின் அறிக்கை
மருத்துவ படிப்புக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் அ.தி.மு.க. அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? - மத்திய அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் ஓ.பி.சி. பிரிவு மாணவர்களுக் கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
5. மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம்: எடப்பாடி பழனிசாமி தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீட்டுக்கு விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று சவீதா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.