மாநில செய்திகள்

சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் + "||" + Festive special trains between Chennai and Nagercoil

சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்

சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
சென்னை-நாகர்கோவில் இடையே பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு ஊரடங்கு அமலான பின்னர் விமான, ரெயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சேவை முடக்கப்பட்டது.  இதன்பின்னர் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட அளவிலான பேருந்துகளும், சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.  இவற்றில் சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றி பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கும் சூழலில் பயணிகளின் வசதிக்காக, பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம் பற்றிய அறிவிப்பினை தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ளது.

இதன்படி, சென்னை-நாகர்கோவில் இடையே வருகிற 23, 24, 29 ஆகிய நாட்களிலும், நவம்பர் 12, 13 ஆகிய நாட்களிலும் பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அனுமதி கிடைத்ததை தொடர்ந்து மின்சார ரெயிலில் பெண்கள் உற்சாக பயணம் 4 மகளிர் சிறப்பு ரெயில்களும் இயக்கம்
மின்சார ரெயிலில் அனுமதி கிடைத்ததை தொடர்ந்து நேற்று பெண்கள் ரெயிலில் உற்சாகமாக பயணித்தனர். மேலும் அவர்களின் வசதிக்காக 4 மகளிர் சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டது.
2. மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கம்-முன்பதிவு இன்று தொடங்குகிறது
மேலும் 5 பண்டிகை கால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) தொடங்குகிறது.
3. தசரா, தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
தசரா-தீபாவளி பண்டிகைகளையொட்டி தென்மேற்கு ரெயில்வே சார்பில் 42 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. சென்னையில் இன்று முதல் 38 மின்சார ரெயில்கள் இயக்கம்
அத்தியாவசிய மற்றும் முன்கள பணியாளர்களுக்காக சென்னையில் இன்று முதல் 38 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
5. தமிழகத்திற்கு மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
தமிழகத்தில் மேலும் 7 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு துவங்குகிறது.