மாநில செய்திகள்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார் + "||" + AMMK Treasurer Vetrivel Passed away

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்

அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் காலமானர்.
சென்னை,

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 அ.ம.மு.க. நிர்வாகி வெற்றிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.