தேசிய செய்திகள்

ஆந்திராவில் மனநலம் பாதித்த தந்தை 6 வயது மகன்களை கொன்று புதைத்த கொடூரம் + "||" + In Andhra Pradesh, a mentally ill father killed and buried his 6 year old sons

ஆந்திராவில் மனநலம் பாதித்த தந்தை 6 வயது மகன்களை கொன்று புதைத்த கொடூரம்

ஆந்திராவில் மனநலம் பாதித்த தந்தை 6 வயது மகன்களை கொன்று புதைத்த கொடூரம்
ஆந்திர பிரதேசத்தில் மனநலம் பாதித்த தந்தை இரட்டையர்களான தனது 6 வயது மகன்களை கொன்று புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
அனந்தபூர்,

ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் பொயலப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ரவி.   காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ரவி மனநலம் பாதிக்கப்பட்டவர்.  இவருக்கு சுதீப் மற்றும் சுதீர் என்று 6 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

இரட்டையர்களான இவர்களை அழைத்து கொண்டு அதிகாலை 3 மணியளவில் கிராமத்திற்கு வெளியே வனப்பகுதிக்கு ரவி அழைத்து சென்றுள்ளார்.  பின்னர் அவர்கள் இருவரும் கழுத்து நெரித்து கொல்லப்பட்டு உள்ளனர்.  

அவர்களை குழி தோண்டி, புதைத்து விட்டு ரவி சென்று விட்டார்.  பின்பு காலையில், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இந்த விசயம் பற்றி எப்படியோ அறிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று சிறுவர்கள் இருவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.  தப்பியோடிய ரவியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்டர்; அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு வேட்டையில் அடையாளம் தெரியாத 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீர் என்கவுண்டர்; அடையாளம் தெரியாத பயங்கரவாதி சுட்டு கொலை
காஷ்மீரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு வேட்டையில் அடையாளம் தெரியாத பயங்கரவாதியை சுட்டு கொன்றனர்.
3. காஷ்மீரில் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
4. முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மரணம்; ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ரகுவன்ஷ் பிரசாத் சிங் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.