மாநில செய்திகள்

அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் + "||" + AMMK Treasurer Vetrivel To the demise MK Stalin's condolences

அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

அ.ம.மு.க. கட்சியின் பொருளாளராக வெற்றிவேல் இருந்து வருகிறார். கட்சி பணியில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த 6-ந்தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலிள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

அ.ம.மு.க. பொருளாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் காலமானார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், அவர் சார்ந்த கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.