தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு + "||" + Heavy rains, floods in Telangana; The death toll has risen to 50

தெலுங்கானாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

தெலுங்கானாவில் கனமழை, வெள்ளம்; பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்து உள்ளது.
ஐதராபாத்,

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மராட்டியம் உள்ளிட்ட மாநில மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  இதனை தொடர்ந்து பேரிடரில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 24 குழுக்கள் குவிக்கப்பட்டு உள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் நேற்றுமுன்தினம் மாலையில் கனமழை பெய்ய தொடங்கியது. தலைநகர் ஐதராபாத் உள்பட பல பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.  இதனால், ஐதராபாத்தில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதந்தன. மழைக்கு வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் நடந்தன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.  தெலுங்கானாவில் 15 பேர் உயிரிழந்து இருந்தனர்.

தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மழை பெய்ததால், தெலுங்கானாவில் நேற்றும், இன்றும் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  2 நாட்களும் மக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழையை தொடர்ந்து முதல் மந்திரி சந்திரசேகர ராவ் தலைமையிலான அவசரகால உயர்மட்ட அளவிலான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையின் 4 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் ஐதராபாத் மற்றும் நகரை சுற்றியுள்ள வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.

இதுவரை ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

இதுபற்றி தெலுங்கானா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்தியில், தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை 50 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி
தெலுங்கானாவில் கனமழைக்கு வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
2. தெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 70 பேர் பலியாகி உள்ளனர்.
3. வடகர்நாடகத்தில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணியில் ராணுவம் தீவிரம் 20 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைப்பு
வடகர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பீமா, கிருஷ்ணா ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் 111 கிராமங்கள் நீரில் தத்தளிக்கின்றன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 20 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4. கர்நாடகத்தில் பலத்த மழைக்கு தாய்-மகள் உள்பட 6 பேர் பலி 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த அழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழைக்கு தாய்-மகள் உள்பட ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே 12 மாவட்டங் களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5. பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் பலி
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர்.