கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி + "||" + IPL Cricket: Kings XI Punjab won by 8 wickets

ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 31வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.  

டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 48(39) ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக சமி மற்றும் எம்.அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியின் சார்பில், கேப்டன் கே.எல். ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதிரடியில் மிரட்டிய இந்த ஜோடியில் மயங்க் அகர்வால் 45(25) ரன்களில் போல்ட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கிரிஸ் கெயில், கே.எல்.ராகுலுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 37 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் சிக்சர்களாக விளாசிய அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் 36 பந்துகளில் தனது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. முடிவில் வெற்றிபெற 1 ரன் தேவைப்பட்டநிலையில் கெயில் 53(45) ரன்களில் ரன்-அவுட் ஆனார்.

இறுதியில் கே.எல்.ராகுல் 61(49) ரன்களும், நிகோலஸ் பூரன் 6(1) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் பஞ்சாப் அணி 20 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அபார வெற்றிபெற்றது.  

தொடர்புடைய செய்திகள்

1. ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணியின் தலைகீழ் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம் - பிரையன் லாரா விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் தற்போதைய தலைகீழ் வீழ்ச்சிக்கான காரணத்தை மே.இ.தீவுகள் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
2. ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்கு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சு தேர்வு
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
4. ஐபிஎல் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்றது.
5. ”கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்” இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹர்திக் பாண்ட்யா
ஐபிஎல் தொடரில் ”கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்” என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்துவது இதுதான் முதல் தடவையாகும்.