மாநில செய்திகள்

அப்துல்கலாம் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை, வாழ்த்து + "||" + Abdulkalam's Birthday: Political Party Leaders Flower Respect, Greetings

அப்துல்கலாம் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை, வாழ்த்து

அப்துல்கலாம் பிறந்தநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை, வாழ்த்து
அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை, 

அப்துல்கலாமின் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் அவருடைய உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்ததோடு, பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்து இருக்கின்றனர்.

பா.ஜ.க. சார்பில் சென்னை கமலாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அப்துல்கலாம் உருவப்படத்துக்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செய்தார். அவரைத்தொடர்ந்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் மரியாதை செய்தனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப்படுத்தவேண்டும். ராமேசுவரத்தில் தொடங்கி இந்தியாவின் முதல் குடிமகனான அப்துல்கலாமின் வாழ்வும், நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி’ என்று பதிவிட்டுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக அலுவலகத்தில் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அப்துல்கலாம் உருவப்படத்துக்கும் கட்சி தலைவர் நாராயணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அப்துல்கலாம் பிறந்தநாளுக்கு, எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.