தேசிய செய்திகள்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம் + "||" + Bhanu Athaiya, first Indian to win an Oscar, dies at 91

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா மரணம்
ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் பானு ஆதெய்யா நேற்று மரணமடைந்தார்.
மும்பை, 

மும்பையை சேர்ந்த பழம்பெரும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதெய்யா. பல ஆண்டுகளாக நோய்வாய்பட்டு இருந்தநிலையில் நேற்று காலை மும்பையில் உள்ள வீட்டில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

1956-ம் ஆண்டு வெளியான சி.ஐ.டி. திரைப்படத்தின் மூலம் ஆடை வடிவமைப்பாளராக அறிமுகமான இவர் சுமார் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி உள்ளார். 1990-ம் ஆண்டு வெளியான ‘லெக்கின்’, 2001-ம் ஆண்டு வந்த ‘லகான்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதையும், 1983-ம் ஆண்டு ரிச்சர்ட் அட்டென்பரோ இயக்கிய ‘காந்தி’ என்ற படத்திற்கு சிறந்த ஆடை வடிவமைப்புக்காக ஆஸ்கார் விருதையும் பெற்றிருந்தார்.

ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.