தேசிய செய்திகள்

மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு 3-வது இடம் + "||" + India third largest contributor to e-waste globally

மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு 3-வது இடம்

மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியாவிற்கு 3-வது இடம்
மின்பொருள் கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா 3-வது இடம் பெற்றுள்ளது.
புதுடெல்லி, 

இ-வேஸ்ட் எனப்படும் மின்பொருள் (எலக்ட்ரானிக்) கழிவுகளை அதிகமாக உருவாக்கும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடம் பெற்றுள்ளது. இந்தியா கடந்த ஆண்டில் 32 லட்சம் டன் மின்பொருள் கழிவுகளை உருவாக்கி உள்ளதாக தெரியவந்து உள்ளது. உலக அளவில் நான்கில் ஒரு பங்கு மின்பொருள் கழிவுகள் இந்தியாவில் உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மின்பொருள் கழிவுகளால் ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கவும், மின்பொருள் கழிவுகளை வெகுவாக குறைக்கவும் பல்வேறு அமைப்புகள் உலகளவில் ஒன்றுகூடி முயற்சிகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு அங்கமாக 2018-ம் ஆண்டு முதல் ‘இ-வேஸ்ட் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இந்தியா மற்ற 40 நாடுகளுடன் இணைந்து நேற்று முன்தினம் (அக்டோபர் 14) சர்வதேச இ-வேஸ்ட் தினத்தை அனுசரித்து இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.