தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம் + "||" + Treatment for corona Mulayam Singh's improvement in health

கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்

கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம்
கொரோனாவுக்கு சிகிச்சை முலாயம்சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா தாக்கி வருகிறது.

இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியின் நிறுவனத்தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு (வயது 80) நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு அறிகுறிகள் இல்லாத தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரை அரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது.

மேலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 71 பேருக்கு கொரோனா தொற்று
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நேற்று 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 143 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
3. பரோலில் வந்துள்ள பேரறிவாளன் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பரோலில் வந்துள்ள பேரறிவாளன், சிறுநீரகத் தொற்று காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
4. திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா சிகிச்சை பலனின்றி ஒருவர் சாவு
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 109 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியாகியுள்ளார்.
5. வேலூரில் மூதாட்டி உள்பட 4 பேர் கொரோனாவுக்கு பலி
வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற வந்த மூதாட்டி உள்பட 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.