மாநில செய்திகள்

ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் இரும்பு பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி - 3½ கிலோ தங்கம் பறிமுதல் + "||" + Rs.3¼ crore - 3½ kg gold seized from iron boxes at Ranipettai environmental engineer's house

ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் இரும்பு பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி - 3½ கிலோ தங்கம் பறிமுதல்

ராணிப்பேட்டை சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் இரும்பு பெட்டிகளில் பதுக்கிய ரூ.3¼ கோடி - 3½ கிலோ தங்கம் பறிமுதல்
ராணிப்பேட்டையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் ரூ.3¼ கோடி ரொக்கம் மற்றும் 3½ கிலோ தங்கம், வெள்ளி பொருட்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 19 மணி நேரம் நடத்திய சோதனையில் ரூ.3¼ கோடி ரொக்கம் மற்றும் 3½ கிலோ தங்கம், வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றை பெட்டி பெட்டியாக எடுத்துச்சென்றனர்.

வேலூர் காட்பாடியில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் இணை முதன்மை பொறியாளராக பன்னீர்செல்வம் (வயது 45) பணியாற்றி வருகிறார். இவர் தொழிற்சாலைகள் தொடங்க உரிமம் வழங்குவதற்கும், தொழிற்சாலைகளின் உரிமங்களை புதுப்பிப்பதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான அனைத்து சான்று பெறுவதற்கும், விண்ணப்பம் செய்பவர்களிடமிருந்து லஞ்சம் வாங்கி சொத்துக்கள் வாங்கி குவிந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் கடந்த 13-ந் தேதி சோதனையிட்டனர். அப்போது ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராணிப்பேட்டை, பெல் நகரிலுள்ள அவரது வீட்டை லஞ்சஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர்.

நேற்று முன்தினம் காலை சுமார் 11 மணி அளவில் தொடங்கிய சோதனை, இரவு முழுவதும் நடைபெற்று, நேற்று காலை 6 மணி வரை 19 மணிநேரம் நீடித்தது. இந்த சோதனையில் பன்னீர்செல்வத்தின் வீட்டில் இரும்பு பெட்டிகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் 6 எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டு ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. மேலும் 3½ கிலோ தங்கம், 6½ கிலோ வெள்ளி ஆகியவையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்கப்பட்ட சொத்துகளின் பத்திரங்களும் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இவற்றை 4 இரும்பு பெட்டிகளிலும், சூட்கேஸ்களிலும் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர்.

வேலூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிகாரி ஒருவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட நகை, பணத்தின் மதிப்பு இதுதான் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பணம், நகைகள், சொத்துப்பத்திரங்கள் பன்னீர்செல்வத்துக்கு எந்த வழியில் வந்தன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தில் தாய், குழந்தை சாவு நர்சுகள் சிகிச்சை அளித்ததால் இறந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்
ராணிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட தாயும், பிறந்த குழந்தையும் உயிரிழந்தனர். டாக்டர் இல்லாமல் நர்சுகள் சிகிச்சை அளித்ததால் தான் இருவரும் இறந்தனர் என கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 12,628 ஆக உயர்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனனால் பாதிக்கப்படோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.
3. ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தற்கொலை முயற்சி
ராணிப்பேட்டையில் நீட் தேர்வு எழுத இருந்த் மாணவி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4. ராணிப்பேட்டை, சிப்காட் பகுதிகளில் ஆரவாரம் இல்லாமல் வீட்டிலேயே நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
ராணிப்பேட்டை, சிப்காட் ஆகிய பகுதிகளில் ஆரவாரம் இல்லாமல் வீட்டிலேயே பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
5. ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகள் அகற்றம் - நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ராணிப்பேட்டையில் சாலையோர தள்ளுவண்டி கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.