தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது + "||" + Navratri Prom at Tirupati Ezhumalayan Temple

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று தொடங்குகிறது.
திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி நேற்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சேனாதிபதி உற்சவம், அங்குரார்ப்பணம் நடந்தது.

சேனாதிபதியான உற்சவர் விஸ்வசேனர் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நவராத்திரி பிரம்மோற்சவ விழா இடையூறு இல்லாமல் தங்குத்தடையின்றி நடக்க அங்குரார்ப்பணம் நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியில் இருந்து காலை 10 மணிவரை வஜ்ர கவச ஆபரணத்தில் தங்கத் திருச்சி வாகனம், இரவு பெரிய சேஷ வாகனம் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை சிறிய சேஷ வாகனம், இரவு ஹம்ச வாகனம், 18-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 19-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 20-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம் (மோகினி அலங்காரம்), இரவு கருட வாகனம் (கருட சேவை).

21-ந்தேதி காலை அனுமந்த வாகனம், மாலை வசந்த உற்சவம், புஷ்ப வாகனம், இரவு யானை வாகனம். 22-ந்தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 23-ந்தேதி காலை சர்வ பூபால வாகனம் (தங்கத்தேரோட்டம் ரத்து), இரவு குதிரை வாகனம், 24-ந்தேதி காலை பல்லக்கு உற்சவம், கண்ணாடி மாளிகையில் ஸ்நாபன திருமஞ்சனம், மதியம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி, இரவு திருச்சி வாகனம் நடக்கிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.