மாநில செய்திகள்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 101 பேர் கைது - சிபிசிஐடி போலீசார் தகவல் + "||" + 101 arrested in connection with PM's farmers' funding scheme scam CBCID

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 101 பேர் கைது - சிபிசிஐடி போலீசார் தகவல்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 101 பேர் கைது - சிபிசிஐடி போலீசார் தகவல்
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

பாரத பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும் இந்த திட்டத்தில் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. கிசான் திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் பலர் விண்ணப்பித்தனர். இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்றதாக புகார் எழுந்தது.

விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளதா? என வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  105 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், கிசான் திட்ட மோசடி தொடர்பாக 100 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.