தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில் 70,338 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர் + "||" + India reports a spike of 63,371 new COVID19 cases & 895 deaths in the last 24 hours

இந்தியாவில் ஒரே நாளில் 70,338 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்

இந்தியாவில் ஒரே நாளில் 70,338 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்
இந்தியாவில் ஒரே நாளில் 70,338 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி,

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக அதிகமான கொரோனா பாதிப்புகளை பெற்றிருக்கும் நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் சமீப காலமாக இந்தியாவில் தொற்றின் வேகம் சரிந்து வருகிறது. சுமார் ஒரு லட்சத்தை எட்டும் அளவுக்கு உயர்ந்த தினசரி பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

அதேநேரம் நாள்தோறும் தொற்றில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. குணமடைந்தோர் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், அதை மேலும் வலுப்படுத்தும் வகையில் தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 70 ஆயிரத்து 338 பேர் தொற்றை வென்றுள்ளனர்.  இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% குணமடைந்தோர் விகிதம் 87.56% ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63,83 லட்சத்தில் இருந்து 64,53 லட்சமானது.

கொரோனா பாதித்த 8.04 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 895 பேர் உயிரிழந்தனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,11,226லிருந்து 1,12,161 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 63 ஆயிரத்து 372 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு 73,07,097ல் இருந்து 73,70,469 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 10,28 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9.22 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.