தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல் + "||" + In Karnataka In the past 2019 10,990 people die in road accidents Deputy First-Minister Lakshman Chavati Information

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி தகவல்
கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 10,990 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியுளளார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் போக்குவரத்துத்துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி காணொலி மூலம் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி கூறியதாவது:-

மைசூருவில் திறன்மிகு போக்குவரத்து முறையை நடைமுறைப்படுத்தியுள்ளோம். இதனால் அங்கு 50 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. கர்நாடகத்தில் டீசல் சேமிப்பு குறித்து ஓட்டுனர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை குறைப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் அதிக விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பஸ்கள் தற்போது எங்கு உள்ளன என்பதை கண்டறியும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சாலை பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும் பஸ்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படுகிறது.

கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 41 ஆயிரத்து 707 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10 ஆயிரத்து 990 பேர் மரணம் அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரையில் 21 ஆயிரத்து 297 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 5,738 பேர் இறந்துள்ளனர். ஆனால் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸ் ரெயில்களாக மாற்றம் - தென்மேற்கு ரெயில்வே தகவல்
கர்நாடகத்தில் 37 பயணிகள் ரெயில் எக்ஸ்பிரசாக மாற்றப்பட்டு உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.
2. கர்நாடகத்தில் கடந்த 4 மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 3.14 கோடி அபராதம் வசூல்
கர்நாடகத்தில் கடந்த 4 மாதத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ. 3.14 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது? - எடியூரப்பா, மந்திரிகளுடன் இன்று ஆலோசனை
கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து மந்திரிகள், அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
4. கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் 263 பேர் படுகொலை - மாநில போலீசார் தகவல்
கர்நாடகத்தில் கடந்த 2½ ஆண்டுகளில் தலித், பழங்குடியின பெண்கள் மொத்தம் 263 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக, மாநில போலீசார் கூறியுள்ளனர்.
5. கர்நாடகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகள் - மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்தில் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவு செய்து உள்ளதாக மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.