மாநில செய்திகள்

அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன் + "||" + Victory is the sign of unshakable faith; T.T.V. Dinakaran

அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன்

அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல்; டி.டி.வி. தினகரன்
அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை,

முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அ.ம.மு.க. பொருளாளரான வெற்றிவேல், கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியான நிலையில், கடந்த 6ந்தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது.  இதனால், கடந்த 9ந்தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.  வென்ட்டிலேட்டரில் (செயற்கை சுவாசம்) வைத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 14ந்தேதி அவரது உடல்நலம் மோசமடைந்தது.  மருத்துவர்கள் அளித்து வந்த சிகிச்சை பலனின்றி அவர், நேற்று காலமானார்.  அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அ.ம.மு.க. பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், அசைக்க முடியாத விசுவாசத்தின் அடையாளம் வெற்றிவேல் என தெரிவித்து உள்ளார்.

துரோகிகளையும், எதிரிகளையும் வீழ்த்தி ஜெயல‌லிதாவின் கொள்கைகளை வாழவைப்பதே வெற்றிவேலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று அவர் தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் கனமழைக்கு 70 பேர் பலி
தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழை தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 70 பேர் பலியாகி உள்ளனர்.
2. உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி; முதல் மந்திரி இரங்கல்
உத்தர பிரதேசத்தில் சாலையில் சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
3. அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்; வெள்ளை மாளிகை மருத்துவர் தகவல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் நாளை முதல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என வெள்ளை மாளிகை மருத்துவர் தெரிவித்து உள்ளார்.
4. ‘மெத்தனமாக செயல்பட்டு விட்டோம்’; சென்னை கேப்டன் டோனி கருத்து
சென்னை கேப்டன் டோனி மெத்தனமாக செயல்பட்டு விட்டோம் என தோல்வி குறித்து தெரிவித்து உள்ளார்.
5. கொரோனாவுக்கு எதிரான போர்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா படுகுழியில் விழுந்து உள்ளது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.