மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை + "||" + Alliance in Assembly election? kamal's MNM party executive committee held discussions today

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? கூட்டணியா? - கமல் ஆலோசனை
மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாக மற்றும் செயற்குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை,

மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை பாண்டிபஜார் தனியார் நட்சத்திர விடுதியில் துவங்கி உள்ளது. இந்த கூட்டத்தில் செயற்குழு மற்றும் நிர்வாக குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சியின் வெற்றிக்கான இலக்கு மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. 

தேர்தல் நிதியை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள், கட்சியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தை விரைந்து நடத்த வைப்பதற்கான வழிவகை குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது எனக் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு!
2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு செய்யபட்டார்.
2. மக்கள் நீதி மய்யம் கட்சி செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்ற்குழு கூட்டம் கமல்ஹாசன் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
3. மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்ட‘நாமே தீர்வு’ இயக்கத்திற்கு தனி இணையதளம் - நடிகர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்தார்
மக்கள் நீதி மய்யம் சார்பில் உருவாக்கப்பட்ட‘நாமே தீர்வு’ என்ற புதிய இயக்கத்திற்கான தனி இணையதளத்தை நடிகர் ஜி.வி.பிரகாஷ் அறிமுகம் செய்தார்.
4. டாஸ்மாக் திறப்பு :ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி
டாஸ்மாக் திறந்து ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.