தேசிய செய்திகள்

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு + "||" + Release of NEED Entrance Exam Results for Medical Studies

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியீடு
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மாதம் 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு 3 ஆயிரத்து 862 மையங்களில் நடத்தப்பட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்த மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் மறுதேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை nta.ac.in மற்றும் ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு விவகாரம்: ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
மருத்துவப்படிப்பு இடஒதுக்கீடு தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை உடனடியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.