உலக செய்திகள்

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு + "||" + 55 dead, 7 missing in central Vietnam's floods, natural disasters

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு

வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
வியட்நாமில் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
ஹனோய்,

மத்திய வியட்நாமில் கடந்த 3 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இடைவிடாத கனமழை பெய்தது. இதனால் மத்திய வியட்நாம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.  கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த இயற்கை சீற்றங்களில் சிக்கி இதுவரை 55 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 7 பேரைக் காணவில்லை என்று இயற்கை பேரிடர் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் 900 ஹெக்டேர் நெல் வயல்களும், 5,500 ஹெக்டேருக்கு மேற்பட்ட பிற பயிர் நிலங்களும் நீரில் மூழ்கின. 4,45,700 கால்நடைகள் மற்றும் விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர். வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்புப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 

இதனிடையே மத்திய வியட்நாமில் இன்று முதல் அக்.21 வரை மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
பெங்களூருவில் கனமழை பெய்ததை அடுத்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
2. ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஆய்வு
ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று சேத பாதிப்பை ஆய்வு செய்தார்.
3. வட கர்நாடகத்தில் வெள்ளம் 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்கவைப்பு
வட கர்நாடகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 174 நிவாரண முகாம்களில் 28,000 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4. வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி...?
வியட்நாமில் பெய்த கனழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5. கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கும் பொதுமக்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் குளியல் போடுகின்றனர். அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.